
நாதஸ்வர இசை
மழையோடு மழையாக
மழையின் தந்திகளில்
இழைகிறது
மழை இருளில்
கார்த்திகை தீபங்கள்
காற்றை நாவால் தீண்டித் தீண்டி
மதிமயங்கச் செய்கிறது
மகள் வரையும்
கார்த்திகைக் கோலங்களை
மழை அழித்து அழித்து விளையாடுகிறது
மழை வரையும் கோலங்கள்
வாழ்வின் கோலங்களுக்கு
வண்ணம் தூவுகிறது
தீப ஒளியின் மேலும்
பெய்கிறது மழை
எத்தனை விரல்கள் ஏற்றி ஏற்றி
எத்தனை எத்தனை சுடர்கள்
இந்த வெளிச்சங்கள்
தீரவே வேண்டாம்
இந்த மழை
தீரவே வேண்டாம்
எனது இந்த மனம்
தீரவே வேண்டாம்
26.11.2023
மாலை 5.22
