லலிதா நவின்/யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார் (இன்னிசை வெண்பா)

உள்ளம் திருத்தி உடலை வருத்தியென்
கள்ளம் கலைத்துனைக் கண்மணியே காட்டிடு
அல்லும் பகலும் அருளுனை எண்ணினேன்
தில்லை நடராசா தாங்கு

எனையாள் சிவமே எளிமைச் சிவமே
தனைநரனாய்க் காணவென்னைத் தந்த சிவமே
உயிரே உணர்வே உடலே சிவமே
தயையேயென் யோகிராமா தீண்டு

நித்தமுன் நாடகம் நானெத் தனைக்கண்டும்
பித்தனுக்குப் புத்தியது போதவில்லை யோகிராமா
சித்தனே எத்தனைச் சென்மங்கள் ஆயினும்
முத்துநீ வந்திடென் முன்

  • நவின்

One Comment on “லலிதா நவின்/யோகி ராம்சுரத்குமார்”

Comments are closed.