இணையக்கால கவியரங்கம்
எண் 38. 26/11/23

ஏக்கர் ஆராயிரம் என்று
என்றோ வாங்கிய
நிலத்தைச்சதுரடி
ஆராயிரம் என்று விற்று
கோடி கோடியாய்
மூட்டை கட்டுகிறார்கள்
சிஎம்டிஏ அப்ரூவலுக்கு
சமையல் கட்டொன்றுக்கு
முப்பதாயிரம் லஞ்சம்
என்று சம்பளத்தோடு
எந்த முதலும் போடாத அதிகாரிகள்
கோடிகோடியாய் சம்பாதிக்கிறார்கள்
வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் வாங்க
ஈபி காரருக்கு லஞ்சமாய்
நாற்பதாயிரம் ஒரு இணைப்புக்கு.
அலுவலக சம்பளத்தோடு அவர்கள்
கொட்டிக்கொண்டு போகிறார்கள்
வீடுகட்டுவதற்கு ச. அடிக்கு
இத்தனை ஆயிரம் என
காண்ட்ராக்காரர்கள்
கணக்குப் போட்டுக்
கோடிகோடியாய்
சம்பாதிக்கிறார்கள்
அய்ம்பது லட்சம் கடனுக்கு
அய்ம்பது லட்சம் வட்டியாம்
வங்கிக்கடனுக்கு
இரவுபகலாய்ப்படித்து
மார்க் வாங்கிய இளைஞர்கள் கண்காணாத தேசத்தில்
தேகம் அழிக்கிறார்கள்
கிழவனும் கிழவியும்
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டு
வாங்கிய வீட்டுக்கு
வாட்ச்மென்களாய்
வானம் பார்த்து
நாட்களை எண்ணுகிறார்கள்.
