
இந்த முறை கார்த்திகை எங்களுக்கில்லை
கார்த்திகையிலும் நாங்களில்லை
இப்போதைக்குஇல்லை என்பது ஒரு தற்காலிகம்
அவ்வளவுதான்
நாளைய நாட்கள் அதனை மாற்றிவிடும் நம்புகிறேன்
ஆனாலும்
முன்வாசல் தொடங்கி
நிலைப்படி நின்று
முற்றம் நிறைத்து
என எல்லா இடங்களிலும் ஒவ்வொரு அகலாக எரியவிட்டுக் கொண்டேன்
நினைவில்.
எல்லோர் இல்லங்களிலும் ஒளிர்ந்தது தீபம்
எல்லோர் உள்ளங்களும்
ஒளி பெற்றன
நானும் ஒளி பெற்றேன்
27.11.2023
தாராபுரம்
