சசிகலா விஸ்வநாதன்/என் அன்னையின் தீபாவளி

இனிய மாலை வணக்கம்.
சொல் புதிது.
திங்கட்கிழமை
மாலை மணி 5.15
இணைய கால கவியரங்கம்
கவிதையின் தலைப்பு

அம்மா உங்களுக்கு
என்ன வேண்டும்;
இந்த தீபாவளிக்கு?

என்ன கேட்டாலும் கிடைக்குமா?
எதிர் கேள்வி இட்டாள்
என் அம்மா!

எதுவாய் இருந்தாலும் கேள் என்று கூற..‌

சற்று தயக்கத்துடன்;

சற்றே கூடுதல்
செலவு;

சம்மதம் ஆயின்;
நம் வீட்டு சாந்திக்கு,

ஒரு சமையல் எரி வாயு
இணைப்பு வாங்கு,

புத்தம் புது அடுப்புடன்;

அவள் பெயரிலேயே…

இதுதான் எனக்கு வேண்டும் என்க…

அதுவே அவள் விரும்பும்

தீபாவளி பரிசாயிற்று

அந்த வருடம்.‌.

சொல்ல மறந்து விட்டேனே!

சாந்தி எனக்கு வீட்டு வேலைகளில் உதவும் பெண்.


27-11-2023