சிறகா/பலூன்கள்

சொல் புதிதில் இணைய கால கவியரங்கம்.
வாசிப்பது சிறகா .

சின்னஞ் சிறு குழந்தைகளின் உள் மன ஆசைகளுக்கு

வர்ணங்கள் பல பூசி வித விதமான வடிவங்களில்

விரிய வைத்து மெல்லிய நூலில் கட்டி

காற்றின் வேகத் திற்கு ஏற்ப ஜோலித்தபடி

அசைந்தாடும் பலூன் களை நீள் கழியின் உச்சியில்

மலர் கொத்து போல் சொருகி வைத்து

அவர்கள் குழு மி விளையாடும்

இடத்திற்கு அருகில் நின்று

கனவுகளை கூவிக் கூவி விற்றான் பலூன் கார ன்

கால் கை முளைத்த

நடமாடும் பருத்த ஜாடியாக

அவனைக் கண்டு

அடக்க இயலாதா சிரிப்புடன்

தத்தம் கனவுகளை

கையில் ஏந்தி வீடு திரும்பினர்

குழந்தைகள்.