ஆர் வத்ஸலா/ஆனாலும்

28/11/23 செவ்வாய் கிழமை அன்று நிகழ்ந்த கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை

காலையில் எழுந்து
உடற்பயிற்சி செய்து
அம்மா தந்ததை
அள்ளிப் போட்டுக் கொண்டு
ஒரு நிமிடம் கண்ணாடியில் முகம் பார்த்து
அவசரமாக தலை வாரி
லேசாகக் கோதிக் கொண்டு
கட்டிக் கொடுக்கப் பட்ட சாப்பாடு
திருத்தப்பட்ட மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களுடன்
ஸ்கூட்டரை உதைத்தான்
எதிர்வீட்டுப் பெண் அப்போது தான் கிளம்புவாள் பணிக்கு என்றும்
தெருக் கோடி வரை அவள் பின் போகலாம் என்றும்
அறிந்ததனால்

அவள் பெரிய அழகியல்ல
என்றும்
இவன் முகத்தை அவள் பார்த்ததில்லை
என்றும்
இவனுடைய கடைசி அக்காவுக்கு மணமாவதற்குள்
இவளும் மணமாகிப் போயிருப்பாள்
என்றும்
தினமும் ஒரு வெள்ளை முடியை பிடுங்கும் அவனுக்குத்
தெரியும்

ஆனாலும்

One Comment on “ஆர் வத்ஸலா/ஆனாலும்”

Comments are closed.