
இணையக் காலக் கவியரங்கம்
நாள் 28.11.2023
தாத்தா போலீஸ் வேலை
பார்த்தார்
ஆகவே போலீஸ் மீசை
வைத்திருந்தார் ஆனால்
அதட்டமாட்டார்..
அப்பா மருத்துவராக
வேலை பார்த்தார்
அதற்கான மீசை
வைத்திருந்தார்
அவருக்கும்
மிரட்டும் சுபாவம்
கிடையாது..
நான் ஆசிரியராக
வேலை பார்க்கிறேன்
நான் மீசை வைக்கவில்லை
ஆனால்
அதட்டுவேன்..
