செ.புனிதஜோதி/சம்சாரி

வானத்தையும்
நிலத்தையும்
அசை போட்டபடியிருக்கும்
அசுரன் அவன்.

வானம் வஞ்சகம்
காட்டும் வேளையில்
நட்சத்திரங்களை
உதிர்த்து
கூழ்க் காய்ச்சி
நிலவை அச்சுவெல்லமாய்
தொட்டுக் குடிப்பவன்

தோலை செருப்பாய்
அணிந்து
பூமித்தாயின்
சுருக்கங்களை நீவி விடும்
மருத்துவன்

அவன் கோவணத்தில் தான்
இங்கே ராஜ்ஜியம்
அவன் ராஜ்ஜியத்தில்
கோவணத்தைத் தவிர
ஒன்றுமில்லை.