
இதில் தாமரைதான் பூக்குமென்று
தடாலடியாய்ஒரு முடிவுக்கு
வந்துவிடாதீர்கள்….
இதுபொறாமையில் புரையோடி…வெந்துதணிந்ததில் வந்த சேறு…
அழுக்கை அழகான ஒப்பனைச்சொற்களால்
மூடிவைத்திருப்பவர்களில்
நானும் ஒருவன் என்றால்…
எனக்கான நற்பதக்கங்களில் ஒன்று குறைந்துவிடப்போவதில்லை…
இயேசுவின் சிலுவை அருகிலே…திருடனின் சிலுவை இருந்ததால்…இருவரையும்
ஒன்றாய்க்கணிக்கும் உங்கள் தீர்ப்பை எரித்துவிடுங்கள்…
எல்லோரும் எல்லோருக்குமான எண்ணங்களைப்போட்டு
உடைத்துவிட்டால்..சேற்றில்
நல்லூற்று சுரந்துவிடாதா..
ஆசைதான் ….ஆனால் மனம்
நெருப்பில் குளித்த தங்கமாய் எல்லோருக்கும்
மாறிவிடுமாயென்ன…?
தங்கமாய் இருந்தால் அவரவர் விருப்பத்திற்கு
வளைத்துவிடமாட்டார்களா.
சேற்றில் கல்லெறிவது தினமும் நடக்கும்தான்…
மேலில் பட்டதைத் துடைத்தெறிந்துவிட்டுப்போகின்றவர்களை மேன்மையானவர்கள் என்று நாம் சொல்லிவிடப்போவதில்லை…
ஆயினும் உங்களில் பலபேர் உள்ளோடியிருக்கும் சேற்றை சந்தனமெனச் சாதிக்கும்போது
நானென்ன செய்துவிடமுடியும்.
♦.
