ஜெயமோகனைப்பற்றி சாருநிவேதிதா

ஜெயமோகன் ஒரு கதையைப் படித்து விட்டு என் ஆன்மா விம்மிய தருணம் ஒன்று உண்டு. இரு நோயாளிகள் என்ற கதை. அந்தக் கதையில் புதுமைப்பித்தன் ஒரு பாத்திரம். புதுமைப்பித்தனுக்கு க்ஷயரோகம் வந்து திருவனந்தபுரம் க்ஷயரோக மருத்துவமனையில் இருக்கிறார். அவரைச் சந்திக்கப் போகும் ஒரு நண்பர் அவரிடம் “உங்களுக்கு எப்படி க்ஷயரோகம் வந்தது?” என்று கேட்கும் போது, “ஊரெல்லாம் என் முகத்தில் காறித் துப்பியது, அதனால் வந்தது” என்பார் பித்தன்.

ஒரு சிறுவன் என்னைத் திருடன் என்று எழுதியபோது அதை நான் புன்னகையோடு கடந்து போனது இந்தக் கதையைப் படித்ததனால்தான். அல்லது, இந்தக் கதையில் வரும் பித்தனைப் போல் வாழ்வை எதிர்கொண்டதால்தான்.

ஜெயமோகனையும் விமர்சிப்பார்கள், வசை பாடுவார்கள், வழக்குத் தொடுப்பார்கள். தமிழ் எழுத்துச் சூழலில் அதிக வசைக்கு ஆளானவர் ஜெயமோகன்தான். ஆனால், அதிலெல்லாம் கடைசியில் ஜெயமோகனின் மணி மகுடத்தில் ஒரு இறகு ஏறும்.

(முக நூலில் ஆர்.கந்தசுவாமி)

One Comment on “ஜெயமோகனைப்பற்றி சாருநிவேதிதா”

Comments are closed.