மீனாட்சி சுந்தரமூர்த்தி/புதிய பாதை

இன்று மாலை வாசித்த கவிதை.


புதிய பாதை
நாளெல்லாம் உழைப்பவன்
நல்ல ஊதியம்
பெறுவது அவன் வாழ்வின்

மனைகளாகும் நிலங்கள்
மீண்டும்
உழவுக்குத் திரும்புதல்,
உழவனின்….

சன்னலில் விழிபதித்து
வழி பார்க்கும்
முதிர் கன்னிக்கு ஆகும்
மணநாள். …

பூவும்,பிஞ்சும்,சருகும்
மதிக்கப்படும்
நாள் உருவாகுதல் ஆகும்
பெண்மையின்..

சொல் ஒன்று, செயல் வேறு
நிலைமாறி
எங்கும் பேச்சு மாறாமை
நீதியின்….

சாலை விதிகள் போற்றி
வாகனம்
இயக்குதல். விபத்தில்லா
பயணத்தின்…….

இலஞ்ச லாவண்யம், வன்முறை
காலாவதி
ஆகும் நாளே நாட்டின்……

பாம்பு சீறுவதும், தேள்
கொட்டுவதும்
அதனதன் இயல்பு, அதைக்
கடப்பதே
இயல்பென அறிவது
மாந்தரின்
புதிய பாதை.