மீனாட்சி சுந்தரமூர்த்தி/ஊர் பேச வேண்டும்

இன்று வாசித்த கவிதை.

மணிமுடி தாங்கி கோலோச்சிய
மன்னரும்
மன்னரெலாம் மண்டியிட
பாரதம்
நடத்திய தெய்வக் கண்ணனும்
கேட்பாரின்றி
மறைந்தே போனார்.

மதம் பரப்புவதே கொள்கை
எனவந்த
பேரழகி தெரசாவும் கருணையாய்
மாறிச் சென்றார்.

திரை தர மறுத்து புளிய
மரத்திலும்,
தப்ப இயலாத போதும்
வஞ்சகரின்
தலைகளைப் பந்தாடி
வயற் காட்டிலும்
வீரமரணம்
விருப்பமானது.

விடியலில் காற்று வாங்கி
நடைபயில
வந்தவரின் மூச்சுக்காற்று
வாங்கியது
சுனாமி.

இத்தரையில் வாழ்வு
நீரின் குமிழி
என அறியாதவர் உண்டோ !

இதில் வைதும், வஞ்சனை
வாது
செய்தும் இருப்பதென்ன
பெருமையோ.

எத்தனை நாள் வாழ்ந்தோம்
என்பதல்ல,
நீர்க்குமிழி போல் சிலநாள்
வாழினும்
ஊர் பேச வேண்டும்.