சசிகலா விஸ்வநாதன்/புதிதாக ஒன்றும் இல்லை

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணையகால கவியரங்கம்.
புதன்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு

புதிதாக எழுதலாம்
என்றே நினைத்தேன்.
புதிதான வார்தைகள் எவையும் சிக்கவில்லை;
புதிதான கருத்து எவையும் தோன்றவில்லை;
புதிதாக நான் புனையும் படி
ஒன்றும் இல்லை;
என்று தெளிந்தேன்.
ஆம்!
ஒன்று மட்டும்
செய்ய இயலும்.
பழைய கருத்துகளையே,
பழைய வார்த்தைகளிலேயே,
புது விதமாய்
அணி செய்து
கோர்வையாய் கோர்க்கலாம்தான்… எவர்க்கும் புரியும் விதமாய்;
யாவரையும் கவரும் விதமாய்;
இயம்பும்
சொல்லறிவு பயிலவேண்டும்.
சொற் கட்டுகளுக்கு
புதுப்புது அர்த்தம்
கற்பிக்கும் பொருட்செறிவு கூட்ட வேண்டும்.
அத்திறமை எனக்கு இருக்கிறதா?…
என்று தெரியவில்லை!
ஆகவே..
புதிதாக என்னால்
எதையும் எழுத
இயலவில்லை

29-11-2023