இணையக் காலக் கவியரங்கம்
நாள் 29.11.2023
பக்கத்து வீட்டுப் பையன்
எங்கோ மரத்தில் ஈன்ற
நான்கு கிளிக் குஞ்சுகளைப்
கொண்டு வந்தான்…
தோலுரித்ததுவாய் இருந்தன
திட்டுகளாய்ப் பச்சை நிறம்..
இன்னும் கொஞ்ச நாளில் கிளியாகும்
என்பதுபோல்…
அவை இரைக்காகப்
பாம்பைப் போல் கழுத்தை நீட்டி வாயைத் திறந்த படியே..
என்ன சாப்பிடும் அவை
இப்போது?
எதுவாச்சும் கொடுக்கணும்
சீக்கிரம் வளந்துட்டா
நல்ல விலைக்கு விக்கலாம்..

