
கன்னத்தில் சட்சட்டென்று
அறைகிறது மழை
ஜன்னல்கண்ணாடியை
இழுத்துச் சாத்துங்கள்
கொஞ்சம்
இறுக்கமாகச் சாத்துங்கள்
என்கிறாள் பக்கத்தில் அமர்ந்திருப்பவள்.
சும்மா ஒன்றும் சொல்லக்கூடாது
கன்னத்தில்
அறைகிற மழை
கொஞ்சம் தைரியமான மழைதான்..
மழை மழை மழை
30.11.2023
தாராபுரம்
