தமிழில்
அதங்கோடு அனிஷ்குமார்

தங்களில் யார் பெரியவர் என்பதில் நான்கு மூதாட்டிகளிடையே சண்டை வந்தது.
அவர்களுடைய பிரச்சனைக்கு ஒரு முடிவு காண ஒரு மணப்பெண்ணை அவர்கள் அணுகினர்.
அவர்களுடைய கோரிக்கையை ஏற்ற மணப்பெண் அவர்களது பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.மேலும் ஒவ்வொருவராக தங்களுடைய பிரச்சனையை முன் வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நான் தான் பசியின் தாய்.நான் தான் ‘எல்லாரையும் விட பெரியவள்’ என பெருமையுடன் அறிவித்தாள்.
மணப்பெண்ணோ இல்லை என்று தலையசைத்தாள். “பசியைப் பற்றி பெருமையாக நினைக்க என்ன இருக்கிறது?ஏதாவது உணவை உண்டால்,ஏன் காய்ந்த சப்பாத்தியைக் கொண்டு கூட பசியை ஜெயித்து விடலாம்” என்றாள்.
“நான் தான் தாகத்தின் தாய். நான்தான் பெரியவள்” என உறுதிப்படக் கூறினாள் இரண்டாவது மூதாட்டி.
நீ ஒன்றும் பெரிய ஆள் அல்ல.சாக்கடை தண்ணீரைக் கொண்டு கூட ஒருவர் தாகத்தை தணித்து விட முடியும்” என்று கூறினாள்.
“நான் தான் தூக்கத்தின் தாய். நானே பெரியவள்” என்றாள் மூன்றாவது மூதாட்டி.
“உடைந்த கல் படுக்கையில் கூட ஒருவர் நன்றாகத் தூங்க முடியும்” என்று மணப்பெண் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நான் தான் நம்பிக்கை தாய். நானே……”என அவள் பேசி முடிக்கும் முன் குனிந்து அவள் காலில் விழுந்த மணப்பெண் “நீயே பெரியவள்” எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கு வாழ்க்கை இருக்கிறது என்று உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறினாள்.
–
