
இணைய காலக் கவியரங்கம் -30.11.23
ஓரக்கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடிவிட்டு
தூரத்துப் மாம்பழமாய்த்
தொங்குவதை விட்டுவிட்டு
நேரத்தில் விழுந்து விடு
நெருக்கத்தில் வந்து விடு
காலத்தில் கனிந்தால் தான்
காதலுக்கு மரியாதை
பாலுக்கு வயதானால்
பழுதாகித் திரிந்து விடும்
பாலைக்கு நீராகப்
பாய்ந்து வந்து விடு
ஏழைக்குச் சோறாக
இன்பம் தந்து விடு
காலைக்குக் காத்திருப்பேன்
கண்ணுக்குள் உன்னோடு
நாளைக்கு வந்துவிடு
நம்பிக்கை தந்து விடு
—————————

Beautiful kavithai!👏
Thanks Mam