♦அனங்கன்/தட்டியும் திறக்காத கதவுகள்….


்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

உள்ளே எரிகின்ற தீயை பசியென்ற பெயரில் நாளெல்லாம் சுமக்கும் மனிதா!
நீ இருக்கின்ற வரையில் சுமக்கின்ற உடலைப் ….பசி
தணிந்து இருக்கவிடுதா…?

அனைத்து உயிர்களின் அடங்காப்
பசியில்தான் உலக இயக்கம் அடங்கியதா…?
உண்ணும் உணவை எரிக்கின்ற
தீ தான் உன் சாம்பலில் முடிகிறதா..?

உணர்ந்து தெளிந்தவன் பிறர்
பசியின் வலியினை உணர்வது
நடக்கிறதா…?
பிறர் பசியை போக்கும் உழவன்
அழுவது… உலகின் முடிவை உரைக்கிறதா…?

உன் பசியைப் போல பிறர் பசியை
உணர வள்ளலார் அருளுரை
கேட்கிறதா…
வாடும் பயிர்கண்டு வாடாமல்
உன்மனம் தனிவழி நடக்கிறதா…

பசித்தோர் பலரிங்கு உணவின்றி
இருக்கையில்…வீணாய்
உணவை இரைப்பது இனிக்கிறதா….?
கர்ணனின் கரம்போல் சுட்டும்
விரல்களால் உன்அருட்கொடை
நடக்கிறதா….?

அறவோர் கூறும் அறிவுரை
எல்லாம் உன்பசியைத் தணிக்கிறதா….?
மூடிய மனதை இரந்து
திறக்க
ஏதேனும் மந்திரம் இருக்கிறதா…?

பசிப்பிணியைப் போக்கும்
அட்சயப்பாத்திரம் உன் மனத்தினில் உதிக்கிறதா…?
தட்டியும்…. திறக்காத கதவுகள் எத்தனை ….அதில்உன்பெயர்
இருக்கிறதா…?

தர்மனின் தேர்போல் உந்தன் கால்கள் மண்ணைத் தொடாமல்
நடக்கிறதா…?
இறுதித்தீர்ப்பில் உன்னைப்
படைத்தவன் கேள்விக்கு…. உன்னிடம் பதில்கள் இருக்கிறதா….?