அவர்களுக்கு நன்றி/அழகியசிங்கர்

நேற்று
இன்ப அதிர்ச்சியை குவிகம் சுந்தரராஜன், கிருபானந்தன் எனக்குக் கொடுத்தார்கள்.
ஒவ்வொருமுறையும் சுந்தரராஜன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரும்பும்போது இங்குள்ள நண்பர்களைக் கூப்பிட்டு விருந்து வைப்பார்.
நேற்று அப்படி ஒரு விருந்தை தி.நகர், பிருந்தாவன ஹாலில் மத்சயா ஓட்டலில் வைத்திருந்தார். விடாமல் மழை பெய்தாலும் 30 பேர்களுக்குக் குறையாமல் வந்திருந்தார்கள்.
நானும் மனைவியும் போயிருந்தோம் .
குவிகம் இதழில் மலர்ந்த மலர்கள் என்ற சுந்தரராஜன் சிறுகதைத் தொகுப்பையும், மக்கள் மன்னன் என்று யாரோ எழுதிய நூல்களையும் வெளியிட்டார்.
இப்புத்தகங்கள் குறித்து வேதா கோபாலனும், நாகேந்திர பாரதியும் உரை நிகழ்த்தினார்கள்.அவர்கள் பேச்சைக் கேட்டபோது புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் எதிர்பாராத விதமாக என்னை மேடைக்கு அழைத்து என் பிறந்த தினம் ஒட்டி கேக் வெட்டச் சொன்னார்.
பொதுவாக பிறந்தநாள் போது என் நண்பர்கள் யாரும் என்னைக் கூப்பிட்டு கேக் வெட்டச் சொன்னதில்லை.
ஒரு முறை சீகாழி வங்கிக் கிளையில் பணி புரிந்து கொண்டிருந்த போது நானே கேக் வாங்கி அங்குள்ள அலுவலக நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினேன்.
ஆனால் நேற்று குவிகம் நண்பர்கள் எனக்குத் தெரியாமல் கேக் வெட்டச் சொல்லி என்னைப் பெருமைப் படுத்தி விட்டார்கள்.

அவர்களுக்கு நன்றி.