சுரேஷ் ராஜகோபால்/மனைவி ஊருக்குப் போறாளாம்

சொல் புதிது, இணைய கால, 44வது கவி அரங்கம், தேதி 02.12 2023 கிழமை சனி , நேரம் மாலை 05.25, “மனைவி ஊருக்கு போறாளாம்!” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

தனியா விட்டுவிட்டு
ஊருக்கப் போகாதே மனையாளே!

சோறு வைக்க எவ்வளவு
உப்பு போடணும் தெரியாது.

கூட்டு செய்ய என்ன
காயை வெட்டணும் தெரியாது.

குழம்பு வைக்க சொல்லிட்டே
மனசு குழம்பித்தான் போச்சே.

அடுப்பை பற்ற வைக்க
சொல்லிட்டா போதுமா?

பாலைக் காய்ச்சணும்
தேநீர் போடணும்
அம்மம்மா இவ்வளவு வேலை இருக்கா?

அடுப்படி ரொம்ப இதமானது
என்றே இத்தனை நாள்
எள்ளி நகையாடினேன்??


சிட்லபாக்கம்
02 12 2023 மாலை 05.25