
இணைய காலக் கவியரங்கம்
ஒளிந்து நெளிந்து
ஒழுகும் ஒளியில்
பச்சை மரங்களின்
பரவசம் ரசித்து
காட்டுப் பூக்களைக்
கட்டிய கயிற்றில்
உல்லாசமாய் ஊஞ்சல்
ஆடுவது சரிதான்
விழுந்து விடாமல்
வேகத்தைக் குறைத்திடு
உன்னுள்ளே குடியிருக்கும்
எனக்கும் இப்போது
மூச்சு வாங்குகிறது
முட்டாள் பெண்ணே
———
