ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்
நாள் 2.12.23

நண்பன் இறந்து விட்டான்
கிளம்பிக் கடைத்தெரு
வந்து நிற்கக் கேட்டேன்..

மாலை எப்படிக் கட்டுவது?

என்ன செய்வது? என்று
இனி காண்போம்..

நண்பன் கேட்டான்..

ஆறு மாதத்தில் தருவதாகச் சொல்லி
வாங்கிய கடனைத்
தந்தாயா?

ஆறு வருடங்கள்
தரவில்லை.. முடியவில்லை..

அவன் அப்பாவிற்காக
மருத்துவ மனைக்குத்
துணை க்குக் கூப்பிட ப் போனாயா?

அப்பவும் போகலே..

மாலை மட்டும் ஏன்?

வேறேதும் வைத்திருக்கிறாயா?

கசிய சொற்களும்
வார்த்தைகளும்
கொஞ்சம்..
கூடவே வாசிக்க
முடியாத கவிதையும்.