
இன்றைய அழகிய சிங்கரின் என்பா
( 1 )
என் காலை நடைப்பயிற்சி இல்லை!
காலை கீழே வைக்க இயலவில்லை
எப்படி நான் சொல்வேன்; இன்று:
மழையை ஏன் பிடித்திருக்கிறது.
(2)
இப்போதுதான் கிடைக்கும் , அருமை
நாரத்தங்காய்:
உப்பு போட்டு பாடம்
செய்துள்ளேன்;
மழை வர; அழுகை வருகிறது:
மழையை ஏன் பிடித்திருக்கிறது.
(3)
அடை மழை! பள்ளி விடுமுறை;
பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்!
பெற்றவளுக்கு திண்டாட்டம்;
நிமிடம் ஓய்வில்லை
சேற்றுப்புண் காலுடன்;
மழையை ஏன் பிடித்திருக்கிறது!
( *4* )
விடா மழை ; அரசு விடுமுறை;
தொண்டையில் இறங்கும் சூடான காஃபி!
இந்த காரணங்கள் போதுமே;சொல்வேன்
மழை ஏன் பிடித்திருக்கிறது.
( *5* )
இன்று நடைபெற்ற
கிரிக்கட் போட்டியில்
மழையின் தயவால்
இந்தியா வெற்றி
இது போதாதா; நான் சொல்ல
மழை ஏன் பிடித்திருக்கிறது.
3-12-2023
