
இணையக் காலக் கவியரங்கம்
நாள் 9.12.23
..
தங்களின் கடந்த கால
இருப்பையெண்ணித்
தொட்டி மீன்கள் புலம்பித்
தவித்தன..
தங்களைத் தொட்டியில்
வைத்திருப்பவனைச்
சபித்தன
நிச்சயம் நரகந்தான்
உனக்கென்று..
உங்களுக்கு என்னதான்
பிரச்சினை என்றான்
அவற்றிடம்..
ஆயிரம் பிரச்சனைகள்
உள்ளன என்றன
தொட்டி மீன்கள்..
எல்லாவற்றுக்கும்
ஒரே தீர்வாக நான்
உங்களுக்குத்
தொட்டியில் தண்ணீர்
வழங்கியிருக்கிறேன்
என்றான்.
