பிரார்த்தனை


ரேவதி பாலு


லாக்டவுன் நேரத்தில் ஃப்ரிட்ஜில் கோளாறு.

சரி செய்ய ஆள் வர முடியாத நேரம் ஆயிற்றே. இது என்ன சோதனை என்று ஒரு நிமிடம் கலங்கித்தான் போனேன். ஃப்ரிட்ஜ் சரி ஆனால் ஒன்பது சுற்று சுற்றுகிறேன் என்று வழக்கம் போல் எங்கள் தெரு ஆஞ்சநேயரை பிரார்த்தித்துக் கொண்டேன்.

என்ன அதிசயம்! ஏதோ குறைந்த வோல்டேஜ் மின் சக்தியால் வந்த கோளாறு போலிருக்கிறது. அதை கவனித்து சரி செய்தவுடன் ஃப்ரிட்ஜ் தன்னால் இயங்க ஆரம்பித்துவிட்டது

. மகிழ்ச்சியோடு ஓடோடி பிரார்த்தனையை நிறைவேற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றபோது தான் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது நினைவுக்கு வந்தது

. “சீக்கிரம் உன் கோவில் திறந்து பக்தர்கள் வர வழி வரட்டும். அதற்கும் ஒரு ஒன்பது சுற்று சுற்றுகிறேன் “என்று கோவில் வாசலில் நின்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்தேன்.

4 Comments on “பிரார்த்தனை”

  1. வெண்ணை சாற்றிய அனுமன் குளிர்பதனப்பெட்டியில் கூலாக இருப்பான்!அவனை இருந்த இடத்தில் ‘ராம பக்தா நன்றி’ என்று சொன்னால் போதும் பிரார்த்தனை நிறைவேறும்.
    சிறகு இரவி

Comments are closed.