
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
சனிக்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
அழகியசிங்கரின் என்பா சாரலாய் ….
(1)
கார் மேக மழை ஒன்று;
பார் மேலே பொழிந்த அன்று;
கோவர்த்தன குடை
பிடிக்காமல்
கோவிந்தனே!
நீ, எங்கே போனாய்?
(2)
இங்கேயேதான் இருந்தேன்; கடுமழை
கண்டு
குடை பிடிக்க குன்று ஒன்றைத்
தேடினேன்; கிடைக்கவில்லை:
குன்றுகளை வெட்டி
எடுத்து வீடாக்கி விட்டீர்.
(3)
ஏரிகளை நிரப்பலாம்
என்றே யோசித்தேன்;
ஏரிகள் எல்லாம் வீடாய் நின்றன.
ஆறுகளை காக்க
ஆவலாதிப்பட்டேன்;
மணல்
இல்லாமல் சாய்ந்தன தருக்கள்.
(4)
சங்குதனை நான் ஒலித்து விட்டேன்;
பெருமழை வருமென்றே!
இருநாள் முன்னரே;
மெத்தனமாய் நீர்
இருந்து விட்டு
என்னை ஏன் நோகுகிறீர்?
(5)
அழுபவரை ஆற்றுப்படுத்தி,
தொழுபவரை தொண்டராக்கி,
பசித்தவருக்கு சோறிட்டு,
பிணியருக்கு மருந்திட்டேன்.
அனலன் அவனையும் சற்று வரச்சொல்லி,
ஆணையிட்டேன் நான் இன்று.
(6)
இனியாவது சங்கொலிக்கு செவி கொடும்.
அடர் கானகம் வளமாய் காத்திடும்
ஏரிகளை தூர்வாரி
ஆறுகளை மேற்கட்டுவீர்.
நலமாய் இரும்;இனி.
9-12-2023
