லக்ஷ்மி ரமணன்/ சிரிப்புக்கும் அர்த்தம்

அமெரிக்காவிலிருந்து வேலைவிஷயமாக சென்னைக்கு
வந்திருந்த பிரதீப் கவனித்துக்கொண்டிருந்தான்
அவன்

அப்பா ராகவன் காலையில் நாற்பது நிமிடம் வாக்கிங்
போய்விட்டுத்திரும்பி வந்து உட்கார்ந்து கைப்பேசியில்
ஆழ்ந்து போவார்.

காலை சிற்றுண்டி முடிந்ததும் டிவி மெகா
தொடர்களைப்பார்ப்பதிலும் கைப்பேசியில் நண்பர்களுடன்
பேசுவதிலும்நேரத்தைக்கழிப்பாரேதவிருஉட்கார்ந்த இடத்தை
விட்டு அசையமாட்டார்

யார் வந்து மணியடித்தாலும் அம்மா சீதாதான் கதவேத்திறக்க
போக வேண்டும் சீதா எனக்கு குடிக்க தண்ணீர் வேணும்
கர்ச்சீப் கொண்டா அது வேணும். இது வேணும் என்று
அவன் அம்மாவை ஓடவைத்ததைப் பார்த்து பொறுக்க
முடியாமல் அவன் கேட்டுவிட்டான்

“ஏம்பா உங்க வேலையை நீங்களே செஞ்சுக்க மாட்டீங்களா
அம்மாவை ஏன் இப்படி அலைய விடறீங்க?”

“ஓ அதுவா “அவன்தந்தை சிரித்தார்

“என்னப்பா சிரிக்கறீங்க?”

“சொல்லறேன். போன வருஷம் உங்கம்மா பார்க்குக்கு
வாக்கிங் போனபோது விழுந்து காலில் அடி பட்டது உனக்குத்
தெரியுமே.அதுக்கப்புறம் வாக் போகிறதை நிறுத்திட்டா.
டாக்டரிடம் கேட்டால் வாக்பண்ணும்போது தான் மறுபடியும்
விழுந்துடுவோமோன்னு அவ மனசிலே பயம் வந்துடுத்தாம்
அவளுக்கு தன்னால் விழாமல் நடக்க முடியும் என்கிற
தன்னம்பிக்கை வருகிறமாதிரி வீட்டிலே நிறைய நடக்க
விடுங்க .தானே சரியாகிவிடும்னு சொன்னார் அதுதான்”

அப்பா மறுபடியும் சிரித்தார் .பிரதீப்புக்கு அதன் அர்த்தம்
புரிந்து அவனும் சிரித்தான்