எஸ்ஸார்சி/தலைகீழாய் உலகம்

இணையக் கால கவியரங்கம்
52

சென்னையில் இடம் வாங்கி
வீடு கட்டிய லட்சணத்திற்கு
ராப்பகலாய்த் தூக்கமில்லை
இரண்டாயிரத்து பதினைந்தை எங்கே மறப்பது
இப்படியாய் யோசிக்கும் போதே ரெண்டாயிரத்து
இருபத்து மூன்று வெள்ளம்
வந்து கொன்று போட்டது சென்னையை.
திருச்சிக்கு மாற்றலாம்
தமிழ் நாட்டின் தலைநகரை
எம்ஜிஆர் சொன்னபோது
கேலிபேசியவர்கள் நாம்
இட ஒதுக்கீட்டில் வருமானத்தை முற்போக்காய் நினைத்துப்பார்த்தவரை
புதுவையில் தோற்கடித்தோம்
எந்தப்பாவமும்சும்மாவிடாது.
முடிச்சூர் வீட்டை நல்ல வெயில்
வந்தால் அரவம் தெரியாமல் விற்றுவிட்டு
வேறு ஊர் போய்விடலாம்
தீவிரமாய்யோசிக்கிறேன்
ரியல்எஸ்டேட் இளம்பெண்கள் ஓயாமல் அழைத்து
நீட்டி முழக்குகின்றனர் ஆங்கிலத்தில்
‘சென்னையில் சூப்பர் பிளாட் டோன்ட் மிஸ் இட் ஹரி அப்’ என்று.
அவர்களுக்குச் சம்பளம்
தருகிறானே ஒருவன்.