நாகேந்திர பாரதி/நீரோடிய நிலமெல்லாம்

அழகியசிங்கரின் சொல் புதிது குழும இணைய காலக் கவியரங்கம் – 52


———————————-
ஏரிகளாய்க் குளங்களாய்
இருந்த நிலங்கள் தான்

வீடுகளாய்ச் சாலைகளாய்
விலை போன பின்னாலே

வேதனையால் வெக்கையிலே
விம்முகின்ற போதினிலே

கொட்டியது மழை
குளிர்ந்தது நிலமெல்லாம்

கிட்டியது இடமென்று
கிளர்ச்சியிலே திளைக்கையிலே

வடிக்கின்றார் நீரையெல்லாம்
வாழ்க்கையினை இழந்திட்டோர்

இயற்கைக்கும் மனிதர்க்கும்
இடைவந்த போரினிலே

நீரோடிய நிலமெல்லாம்
நிமிர்கின்ற கட்டிடங்கள்

பூமித்தாய்ப் பொறுமையினைப்
புரிந்து கொண்டால் நல்லது

இல்லையென்றால் இருக்கிறது
இயற்கையின் பேரழிவு

—————

One Comment on “நாகேந்திர பாரதி/நீரோடிய நிலமெல்லாம்”

Comments are closed.