
சொல் புதிது, இணைய கால, 52வது கவி அரங்கம், தேதி 10.12.2023 கிழமை ஞாயிறு , நேரம் மாலை 05.25, “உலகமே ஒரு புள்ளி ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
“
பிரபஞ்சத்தில் உலகமே ஒரு புள்ளி
பற்பல புள்ளிகள்
நடுவே இருந்திடும் ஒரு புள்ளி
அதிலே நானும் ஒரு புள்ளி
ஒரு புள்ளியே உலகமாகாது
உலகத்தில் பற்பல புள்ளிகள் உண்டே
ஒரு புள்ளி மறைந்தாலும்
உலகம் இயங்கும்.
புதுப்புது புள்ளிகள்
தோன்றிய வண்ணம் இருக்கும்
பழைய புள்ளிகள் மறைந்தாலும்
புதிது தோன்றினாலும்,
பிரபஞ்சம் தன்னிலை மாறாது
பற்பல உயிரியக்கம்
கொண்டாலும் புதிது
தோன்றிய வண்ணம் இருக்குமே.
சிட்லபாக்கம்
10 12 2023 மாலை 5.25
