
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
ஞாயிற்றுக்கிழமை
இணைய கால கவியரங்கம்
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
கோபத்தில் பிழைத்தாலும்,
தாபத்தால் தவறினாலும்,
அறியாமையில்
தவறினாலும்,
சாபத்தால் என
எண்ணற்க!
பாவத்தால் என்றும் நினையாதிரு!
காலத்தின் கோலம் எனவே கொள்.
ஆலம் உண்ட
நீலகண்டனை நினைவுறு.
கானகம் ஏகிய
காகுத்தனை நினைவுறு.
மாதவனே துணையிருந்தும்,
மாறா துயர் அடைந்த,
பாண்டவரை நினை.
ஒற்றை ஆடையை
கீண்ட நளனை நினைவில் வை.
குணத்தால் வானம் ஏறிடுக!
குலத்தை அம்பலம் ஏற்றிடுக!
மனக்கவலை மாற்றுக.
தவறுகளை உணர்ந்து
திருத்தி மேலே செல்
தெளி அறிவு பெறுக
10-12-2023
