
நாரதர் கை
எண்ணெய்க் கிண்ணமென
பெருந்தொற்று, சிறுதொற்று
தொடர் மழை, நில நடுக்கம்
அங்கங்கே போர்
இவை நடுவே இவ்வாழ்வைச்
சிந்தாமல், சிதறாமல்
தளும்பாமல், குறையாமல்
காப்பாற்ற பகீரத முயற்சிகள்
செய்வதற்கிடையே
மூச்சு விட நேரமில்லை.
தெளிவுறவே அறிந்து
தெளிவுதர மொழிந்து
உள்ளத்தில் களி வளர
ஆனந்தக் கனவு பல காட்டிய
மகாகவி பாரதி தமிழின் மூச்சு.
பாரதி நாளில்
பாரதியெனும் மூச்சுக் காற்றை
உள்வாங்கி சிந்தை அகம்
உளமெலாம் நிறைத்துக்
கொண்டாடலாம்.
