
அழகியசிங்கரின் என்பா
(1)
தெள்ளுத் தமிழை
தெளிவாக கற்க
சிறாரும் சித்திரத் தமிழைப் பழக
பாரதியின் புதிய ஆத்திச் சூடி;
பாரதி கொடுத்த கொடை.
( *2*)
விடுதலை தினம், குடியரசு தினம்
கொண்டாடும் நாட்களில்,
பள்ளிச் சிறார்களுக்கு
பேச்சுப்போட்டி,
கவிதைப்போட்டிகளுக்கு
கருத்துக் கடலென
இருக்கும் பாடல்கள்;
பாரதியார் தந்த கொடை.
( *3* )
நற்றமிழ் நாட்டில்,
வீட்டுக்கு வீடு
வம்சம் விளங்க
பிறந்து வரும்
குழந்தை, பெயர் பாரதியே!சிறந்த
பாரதியார் தந்த கொடை.
( *4* )
பெண் விடுதலை
பேசும் எவர்க்கும்
சிந்தனை தெளிவும்,
மனத் துணிவும்,
அகலா தன்னம்பிக்கை
தரும் பாடல்கள்;
பாரதியார் தந்த கொடை.
( 5 )
பிள்ளைகள் எவருக்கும்,விடுதலை போராட்டத்தின்
அரிச்சுவடியாய் தெரிவது
விடுதலை பாடல்களே!
அவை என்றும் தமிழ் நாட்டிற்கு;
பாரதியார் கொடுத்த கொடை.
11-12-2023

Very nice