எஸ் சிவகுமார்
அதிகாலையில்
அந்தச் சூரியன் உதிக்கத் தவறிய ஒரு நாளில்
நான் பிறந்தேன்.
அதிர்ஷ்டமாம்.
செல்வம் கொழிக்குமாம்
காணி நிலம் கிடைக்குமாம்.
காத்துக் காத்து
வாடகை வீட்டில்
தேய்ந்து தேய்ந்து
நிற்கையில்
பகவானைப் பார்த்தேன்,
சற்றருகே.
புன்முறுவல் பரிமாற்றம்.
கேள் கேள் என்றது மனம்
நில் நில் என்றது மனசாட்சி!
பகவானும் போய்விட்டார்!
எப்ப வருவாரோ?
எந்தன் கலி தீர?

சபாஷ்