
திரு. அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 56
….!..
கொட்டும் மழையை ரசித்து
நான் தீட்டிய ஓவியத்தில்
வளைந்த வண்ண வானவில்
வானில் நாட்டியமாடும்
இடி மின்னல் வெட்டுங்கள்!
மழை ஓய்ந்தபின்
நனைந்த மணம் வீசும்
சிவந்த ஓட்டு வீடு
சொட்டு விடும் கூரை வீடு
சிறுவர் விளையாடும்
மழை நீரில் மிதந்து
ஓடும் காகிதக் கப்பல்கள்!
என் மழை ஓவியம் எப்படி?
நண்பனிடம் கேட்டேன்
அவன் சிரித்துக்கொண்டே
மழை நீரில் நீ வரைந்த
காகிதமே நனையவில்லை
மழை ஓவியத்தை நான்
எப்படி பார்த்து ரசிப்பது?
பள்ளிக்கரணை🦚
