
சொல் புதிது, இணைய கால, 58வது கவி அரங்கம், தேதி 16.12 2023 கிழமை சனி, நேரம் மாலை 05.10, “இரைச்சல் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
அமைதியின் இருந்த இடம் தெரியவில்லை
மௌனத்தைத் தேடினேன்
ஒளிந்து இருந்தது
மௌனம் சட்டென்று சிலிர்த்து எழுந்தது.
மௌனம் இரைச்சலாக
மாறியது ஏன்?
வித்தியாசம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை.
கெஞ்சிக் கேட்டான் அமைதியிடம்
சிரித்துக் கொண்டே
மௌனமும் அமைதியும்
இரைச்சலில் சமாதியாயின.
சுரேஷ் ராஜகோபால்.
16/12/2023 மாலை 05.10
