சசிகலா விஸ்வநாதன்/வெள்ள நிவாரணம்

‌இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
சனிக்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு


எவருக்கு உரித்தோ;
அவர் கைகளுக்கா
போய் அடைகிறது..
வெள்ள நிவாரணம்?
ஆடி காரில் வரும்
அடுக்கக சீமான்கள்
வசதியாய் வந்து
வாங்கி போவார்கள்.
வரிசையில் நிற்கும்
ஏழைகள் என்றும்
கையேந்திகளே!
ஐந்து கிலோ அரிசிக்கும்
ஒரு கட்டி சோப்புக்கும்
படும் அல்லல்
சொல்லில் அடங்காது.
இப்போது வருவார்கள்;
இன்னும் சிறிது நேரம்;
சிறிது நேரம்… சிறிது நேரம்..
என்று சொல்லி
மாலை நான்கு மணி அளவில்….
தலைவர் வந்தே விட்டார்.
வரிசையில் முதலில் நின்ற என்னை
பார்த்த பார்வையில்…
நானே பின்னுக்குத் போக..
கட்சி வண்டியில்
இருந்துஇறங்கிய
மாதர் குல தெய்வத்திற்கு,
மகிழ்வுடன் பைகளை அளிக்க..
அவர் வணக்கத்துடன் பெற்றுக் கொள்ள…
போட்டோக்கு புன்னகைக்கும்
பெருமானார் அறியாரா?
எவருக்கு,எதை, எப்போது,
கொடுக்க வேண்டும் என்பதை…
படியளக்கும் சாமி அவர்
அனைத்தும் அறிவார்!



15-12-2023