லக்ஷ்மிரமணன்/அன்பளிப்பு


“மீனா வா பக்கத்து வீட்டு விஜயா மாமி பெண்நிஷாவுக்கு நாளைக்குக் கலியாணம். அதுக்கு
கொடுக்க ஏதாவது கிப்டு வாங்கி வரலாம் கைப்பை, ரிஸ்ட்வாட்ச்,வெள்ளி விளக்கு இப்படி ஏதாச்சும் வாங்கிக் கொடுக்கலாம்.”
“வேண்டாம். நாம் கொடுக்க
நினைக்கிறதொகையை அப்படியேகவரில் போட்டு அன்பளிப்பாக் கொடுக்கலாம்
அவளுக்கு தேவையானதை வாங்கிக்கட்டும்.பணமாகக்கொடுத்தால் செலவாயிடும் .கிப்டு
கொடுத்தால் மீனா மாமி கொடுத்ததுன்னு
எடுத்துப்பார்த்து நினைச்சுப்பா”
மீனா ஒப்புக்கொள்ளவில்லை .தன் முடிவில் அவள் தீர்மானமாக இருந்ததால் முரளி அரை
மனதுடன் ஒப்புக்கொண்டான்.
திருமணம் முடிந்த மறுநாளே நிஷா தன் கணவன் மாதவனுடன் சிங்கப்பூர் கிளம்ப தயாராகி விட்டதால் புதுமணத்தம்பதியரை
வாழ்த்திவிடை கொடுத்துவர மீனாவும் முரளியும் போனபோது, “வாங்க ஆன்டி,அங்கிள்”

நிஷா அவர்களை வரவேற்று
உபசரிக்க பின்னால் விஜயாமாமி நிஷாவுக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகளை
எடுத்து வரிசையாக அலமாரியில்அடுக்கிக்கொண்டிருந்தாள்.


இரண்டு குக்கர்கள்,நான்கு கைக்கடிகாரங்கள்
சுவாமி படங்கள், அரைடஜன்விளக்குகள் பிளாஸ்டிக்டப்பாக்கள்இஸ்திரிப்பெட்டிகள்…..


“பாவம் பிரியமாய் எல்லாரும் வாங்கிக் கொடுத்திருக்காங்க ,இத்தனையையும்
வெச்சுண்டு நான் என்ன செய்வேன்? சிங்கப்பூருக்கு எப்படி எடுத்துப்போவேன்?”


நிஷா புன்னகயுடன் சொன்னாலும் முகத்தில் வேதனையும் தெரிந்தது.
மீனா முரளியைப்பார்த்தாள்.


அதன் அர்த்தம் அவனுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

.