நிர்மலா ராணி/வாய்மையே வென்றது

(முகநூலில் ஆர். கந்தசாமி பகிர்ந்து கொண்டது)

வாயிலிருந்து லிங்கம் எடுத்த பிரேமானந்தாவை உண்மையை ’கக்கவைத்த’ இவரின் துணிச்சலை அன்று நாடே பேசியது. 1983 வாக்கில் திருச்சி வந்த பிரேமானந்தா ’நிர்வாண பூஜை’ உள்ளிட்ட பல அசிங்கங்களை ஆன்மிகத்தின் பெயரால் செய்துவந்தார். இந்தக் கொடுமையை முதலில் வெளிப்படுத்தியது பத்திரிகையாளராக இருந்த நிர்மலா ராணிதான். இவர் தோழர் பாப்பாவின் இளைய மகள். பாதிக்கப்பட்ட சுரேஷ்குமாரி, லதா என்ற இரண்டு பெண்களும் ஆசிரமத்தைவிட்டு வெளியேவந்து அடைக்கலமானது தோழர் பாப்பாவிடம்தான். தோழர் பாப்பா தந்தியின் மூலம் SP-க்குக் கொடுத்த புகார்தான் ஆசிரமப் பெண்களைக் காப்பாற்ற நடந்த முதல் நடவடிக்கையாகும். பல ஆதிக்க சக்திகளால் மிரட்டப்பட்டார். தன் குருதியில் கலந்த துணிச்சலோடு, “போடா” என்று சொன்னதுதான் அவரை ‘சிங்கப் பெண்’ என்று மக்களைச் சொல்லவைத்தத்து. பிறகு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ரஷீதா பகத் ஜனவரி 1994-ல் எழுதிய SPIRITUALISM AND FLESH பரவலாகக் கவனிக்கப்பட்டது. 15,000 பெண்களைத் திரட்டி நாடு முழுதும் பெரிய போராட்டத்தை பாப்பா முன்னெடுத்தார். 14 அபலைகள் காப்பாற்றப்பட்டார்கள். பெரிய சட்டப்போராட்டம் அது. அருள்ஜோதி என்ற பெண்ணின் DNA சோதனையால் உண்மை பிறந்தது. இந்தியாவின் பெரிய வக்கீல்கள் பிரேமானந்தாவுக்காகப் புதுக்கோட்டைக்கு வந்தார்கள். ஆனாலும் ’வாய்மையே வென்றது.’

நன்றி: விகடன்