
18 12 2023 விருட்சம் நடத்தும் 60 ஆவது இணையவழி கவியரங்கில் வாசித்த கவிதை
என் வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளை வைத்தேன் .
இன்னும் மொட்டுவிடவில்லை.
பெருமழையில் நனைந்து தப்பிப் பிழைத்தன.
பின் பருவம் தப்பிய மழையில் வாடி உயிர் பெற்றன .
அடுத்து வந்த பனிப்பொழிவில் இலைகள் உதிர்ந்து வெறுமையாய் நின்றன.
கோடையில் தொடக்கத்தில் மீண்டும் களை எடுத்துத் தோட்டத்தை சீர்ப்படுத்தினேன்.
இன்னும் பூக்கவில்லை.
ஆனாலும் என் நந்தவனத்தில் பறந்து கொண்டிருக்கின்றன பட்டாம்பூச்சிகள்.
பட்டாம்பூச்சிகளுக்குத் தெரியாதா எப்போது பூக்குமென்று.
.
.சென்னை 18.12.2023.
