இணையக் கால கவியரங்கம் 60
18/12/2023

எல்நினோ ஸ்பானிஷ்
பாஷையில் கடவுளின்
குழந்தை.
கிழக்குப் பசிபிக்கில்
வெப்பம் சராசரிக்கு
மேலே போனால் எல்நினோ கீழே போனால்
லாநினோ
க்ளோபலிசேஷன் இது.
பாடாய்ப்படுத்துகிறது
தென்தமிழ் நாட்டில்
தூத்துக்குடி நெல்லை
நாகர்கோவில்
இங்கெல்லாம் வெள்ளமோ
வெள்ளம்.
இருநூறு ஆண்டுகளாய்
வரலாறு காணாதது.
மக்கள் தவியாய்த் தவிக்கிறார்கள்.
கனடா போன சம்பந்தி
பேசினார்
பனியே வரவில்லையாம்
இன்னும் அங்கு
மைனஸ் முப்பதுக்கு
இருக்கவேண்டிய வெப்பம்
ஆறோ ஏழோவாம்.
இருநூறாண்டுகளாய்
இல்லாத விஷயம்.
என்ன என்னவோ நடக்கிறது
சூழலியலில்.
வாழும் பூமி பற்றிக்
கூடுதலாய்க்
கவலை கொள்வோம் நாம்.
