
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
திங்கட்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
உன்னால் முடியுமா;
உலகம் மலைத்தது.
என்னால் முடியும்;
என நான் நம்பி
முடிந்தவரை முயன்றேன்;
நான் என்றால்
நான் மட்டுமா?
நான் மட்டுமல்ல:
ஆசான் தந்த கல்வி,
தந்தை தந்த மாண்பு,
தாய் தந்த பண்பு,
தரணி தந்த துணிவு, இவையும் கூட;
என்னால் முடிந்ததும்
மலைப்பினை மறந்து கைதட்டியது; உலகம்
ஆனால்;
நான் மறக்கவில்லை..
முன்னால் ஒரு வினா
இதே உலகம் கேட்டதை..
இனியும் இந்த வினா
என்னைத் தொடரும்;
தொடர்ந்தே என்னை முன்னிலைப் படுத்தி, முன்னேற்றும்.
18-12-2023
