
சொல் புதிது, இணைய கால, 60வது கவி அரங்கம், தேதி 18.12 2023 கிழமை திங்கள் , நேரம் மாலை 05.05, ” விடாத மழை” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம்
மதுரை முதல் குமரி வரை
நீரில் மிதக்குது
திருநெல்வேலி தூத்துக்குடி
தூள் பறக்குது . 1
நாள் ஒன்றில் இத்தனை மழை
பாக்காத இடமெல்லாம் நீரா இருக்குது
கம்மா கழனி கால்வாய்யெல்லாம் காணாம போகுது
சாலையெல்லாம் தாமிரபரணி ஆறா ஓடுது 2
மழையே உந்தன் கொடையே இதுதானோ
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமே
உந்தன் கோரதாண்டவம் போதும்
அளவோடு பெய்து ஒதுங்கிவிடு. 3
பெய்யெனப் பெய்யுமாம் மழை
யார் இப்போது
பெய்யச் சொன்னது? 4
நீயா?
நானா?
இல்லை யாரோ தானா? 5
சுரேஷ் ராஜகோபால்
சிட்லபாக்கம்
18 12 2023 மாலை 05.05
