வைதேகி/ஓரறிவு

60வது இணையகாலக் கவியரங்கம்

.
இலைகளும் கிளைகளுமாய்
அடர்ந்த மரம் நிற்க
நண்பர்கள் கூட்டம்
அதன் நிழலில் அமர
புலம் பெயரும்
பால்ய நட்பின் கதைகளும்
வளர்ந்த விதத்தின் வாஞ்சைகளும்
பரிமாறப்படும் பழைய கனவுகளும்
பசியாறும் நினைவுகளுமாய்
பேசி சிரித்து
ஏதோவொன்றை இறக்கி வைத்த
சுகத்தில் விடைபெறுகையில்
உணர்ந்து கொண்டதுபோல்
கிளையசைத்து விடைகொடுக்கும் மரத்திற்கு..
ஓரறிவு தாண்டியதோர்
அறிவு இருக்குமென்றே தோன்றுகிறது.

.

7 Comments on “வைதேகி/ஓரறிவு”

  1. இந்த மரத்தைக் காட்டி காட்டித்தான் என் தாய்
    எனக்கு ச் சோறு ஊட்டினாள்.ஆக அது என்
    தமக்கை. சற்று த் தள்ளிப் போய் பேசுவோம் வா என்று தலைவனை அழைக்கும்
    தலைமகள் பற்றி ப் பேசும்
    சங்கப்பாடலை நினைவூட்டியது.
    நினைவூட்டியது

    1. படிப்பறிவு ஞானத்தை
      புதியதோர் கோணத்தில்
      புதுக்கவிதை புதினமாய்
      பிடித்ததுவாய் வடித்துள்ளீர்!
      எழு மனதின் எழுத்துக்கள்
      எழுபது ஆகினும் இனிக்கின்றதே!

  2. அருமையான கருத்து பதிவு,சிறு வயதில் அந்த மரத்தில் எல்லாம் ஏறி விளையாடிய தருணம் நினைவலைகளாக வைதேகி !!!

  3. படிப்பறிவு ஞானத்தை
    புதியதோர் கோணத்தில்
    புதுக்கவிதை புதினமாய்
    பிடித்ததுவாய் வடித்துள்ளீர்!
    எழு மனதின் எழுத்துக்கள்
    எழுபது ஆகினும் இனிப்பதுவே!

  4. படிப்பறிவு ஞானத்தை
    புதியதோர் கோணத்தில்
    புதுக்கவிதை புதினமாய்
    பிடித்ததுவாய் வடித்துள்ளீர்!
    எழு மனதின் எழுத்துக்கள்
    எழுபது ஆகினும் இனிப்பதுவே

Comments are closed.