
ஒரே வானம் ஒரே சூரியன்
வளர்ந்து தேயும் வட்ட நிலா
கண்சிமிட்டும் எண்ணிலடங்கா
விண்மீன் கூட்டங்கள்!
இன்று கண்ணுக்கும்
மனதுக்கும்
அந்திவானம்
மயக்கம் தருகிறது!
நேற்றுப்போல் இன்று
அதே அந்திவானம்
மனம் மயங்கவில்லை!
அதே வானம் சூரியன்
விண்மீன் கூட்டங்களில் l
சில உதிர்ந்து இருக்கலாம்.
அந்திவானம்
மனம் மயங்கவில்லை
மாறி காட்சி அளிக்கிறதா?
மனதின் பார்வை
மாறி விட்டதா?
அந்திவானம் மாறுவதேன்?
பள்ளிக்கரணை, சென்னை
