அழகியசிங்கர்/அப்பாவின் த்வசம்

த்வசம் நடக்கும்
சமயத்தில்
இயல்பாக இருக்காது
என் வீடு
பாட்டி காலத்திலிருந்து
இப்படித்தான்
இப்போது மனைவி
தொணதொணவென்று
எதாவது
சொல்லிக்கொண்டிருக்கிறாள்
அவள் இயல்பு
சமையல் செய்ய
மடிப்பாக்கத்திலிருந்து
சமையல் செய்பவர் வந்திருக்கிறார்
வாத்தியார் வருகையை
எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்
சமையல் அறையைக்
கடந்து செல்லும்போது
ரசம் நல்லா வாசனையை
இருக்கிறதென்றேன்
இதில் என்ன
தப்பு இருக்கிறது
முறைத்துப் பார்க்கிறாள்
மனைவி