வைதேகி/தீண்டல்

62லது இணையகாலக் கவியரங்கம்.


காதோடு அழுத்திப் பிடித்த கைபேசியில்
பக்கத்து இருக்கைப் பெண்
காலையில் தாமதமாக எழுந்ததிலிருந்து
பரபரத்துக் கிளம்பி சாப்பிட நேரமின்றி
பேருந்தில் ஓடி வந்து ஏறியது வரை
கோர்வையாய் சொல்லிக்கொண்டு வருகிறாள் தன் அம்மாவிடம்…
பிரவகித்த நினைவலைகளின் நீட்சியில்
கரைகட்டிய கண்ணீர்த் துளிகள்
என் கன்னத்தில் உருளாமல்
ஒற்றியெடுத்துச் செல்கிறது
அம்மாவின் மென் தீண்டலாய்
பேருந்தின் சன்னலோரக் காற்று.

.

One Comment on “வைதேகி/தீண்டல்”

Comments are closed.