
சொல் புதிது, இணைய கால, 63வது கவி அரங்கம், தேதி 21.12 2023 கிழமை வியாழன் , நேரம் மாலை 05.10,”காதல் ஒரு அநாதை!” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
தனியே நிற்கும் காதலுக்குத்
தாயும் கிடையாது
தந்தையும் கிடையாது
யாருமற்ற அனாதைதான்
முனைந்தால்
அவனும் அவளும்
தத்து எடுத்துக் கொள்ளலாம்.
பார்வையில் பரிமாற்றம்
ஏகாந்தப் பார்வை
கிரங்கிப் போதல்
வைத்தக்கண் வாங்காமல் பார்த்தால்
ஏக்கம் மயக்கம் ஆசை
என்றே தொடங்கும் காதல்
இருமனம் ஒப்புதலோடு இணைவது
நல்ல காதல்.
சிட்லபாக்கம்
21 12 2023 மாலை 05.10
