என் நூற்றாண்டு /தேவதச்சன்

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது

படிவங்கள் நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது

தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது

எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமலிருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்

இருபத்தொன்றாவது நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்

(விகடன் பிரசுரம் ‘உலகத் தமிழ்க் கவிதைகள் ‘ புத்தகத்தில் இருந்து தேவதச்சன் அவர்களின் ‘ என் நூற்றாண்டு கவிதை ‘ .இந்தப் புத்தகம் ஒரு புதுமையான முயற்சி. நமது தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி . தமிழும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கலந்து இதில் .

இந்தக் கவிதையில் இந்த நூற்றாண்டின் அவசரத்தன்மையையும் , நமது மனிதாபிமானம் அற்ற தன்மையையும் காட்டி விட்டு , அடுத்த தலைமுறையிலாவது இது மாறுமா என்ற தனது ஆசையையும் கடைசி)